‘எங்க ஊருல வந்து பேசிப் பாருங்க’மிரட்டல் விடுத்த அசாம் முதல்வர் விருந்துக்கு அழைத்த கெஜ்ரிவால்
கவுகாத்தி: அசாம் சென்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவதூறு வழக்கு தொடருவதாக தனக்கு மிரட்டல் விடுத்த அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவை மதிய விருந்துக்கு அழைத்து பதிலடி தந்துள்ளார். அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘ என் மீது ஊழல் வழக்கு இருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார். ஏப்ரல் 2ம் தேதி அசாம் வரும் அவர் இங்கு வந்து என்னை ஊழல்வாதி என்று சொல்லட்டும். அடுத்த நாளே, மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக செய்ததை போல, கெஜ்ரிவால் மீதும் அவதூறு வழக்கு தொடருவேன்’’ என சவால் விடுத்தார்.இந்நிலையில், கவுகாத்தியில் நடக்கும் ஆம் ஆத்மி பேரணியில் கலந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் இருவரும் நேற்று அசாமின் கவுகாத்திக்கு வந்தனர். அங்கு விமான நிலையத்தில் பேட்டி அளித்த கெஜ்ரிவால், ‘‘என்னை சிறையில் அடைக்கப்போவதாகவும், திரும்பிச் செல்ல விடமாட்டேன் என்றெல்லாம் மிரட்டல்கள் விடுப்பது ஒரு முதல்வருக்கு ஏற்புடையது அல்ல, அசாம் மக்கள் மிகவும் நல்லவர்கள். ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஹிமந்தாவை டெல்லிக்கு வருமாறு அழைக்கிறேன். என் வீட்டில் என்னுடன் தேநீர் அருந்தி, மதிய உணவு சாப்பிட வேண்டும். நான் அவருக்கு டெல்லியை சுற்றிக் காண் பிப்பேன் ’’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
