பனியில் உறைந்தனர் கனடா எல்லையில் இறந்த 4 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
மெசானா: அமெரிக்கா - கனடா எல்லையில் 4 இந்தியர்கள் உட்பட 8 பேர் சடலமாக கடந்த வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல முயன்றதாக போலீசார் விசாரணையில் உறுதிபடுத்தி உள்ளனர். இவர்கள் பனியில் உறைந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பலியான 4 இந்தியர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் விஜாப்பூர் தாலுகா, மானேக்பூர் கிராமத்தை சேர்ந்த ஜசுபாய் சவுத்ரி தனது சகோதரர் பிரவீனி சவுத்ரி (50), அவரது மனைவி திக்ஷா (45), மகன் மீட் (20) மற்றும் மகள் விதி (24) ஆகியோர் சுற்றுலா விசாவில் 2 மாதங்களுக்கு முன் கனடா சென்றதாகவும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அவர்களின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளார். இதே போல, கடந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி, குஜராத்தின் காந்திநகரில் உள்ள டிங்குச்சா கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்றபோது பனில் உறைந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
