லண்டன் வீதிகளில் வலம் வரும் நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி
லண்டன்: நாக சைதன்யா, ஷோபிதா துலிபாலா ஜோடி லண்டன் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நாக சைதன்யா. சமந்தாவும் நடிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை ஷோபிதா மறுத்து வந்தார். நாக சைதன்யாவும் இதை மறுக்கும் விதமாகவே பேசி வந்தார். ஆனால் தற்போது இருவரும் லண்டனில் விடுமுறையை கழித்து வருவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் லண்டனில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றுக்கு இவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்த செஃப் நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னணியில் ஓரமாக ஷோபிதா அமர்ந்திருப்பது புகைப்படத்தில் தெரிகிறது. அதை கண்டுபிடித்த நெட்டிசன்கள், காதல் உண்மைதான் என நாக சைதன்யா, ஷோபிதாவை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதே சமயம், இந்த புகைப்படத்தை தெரிந்துதான் நாக சைதன்யா தரப்பு வெளியில் கசிய விட்டிருக்கிறது. இதன் மூலம் சமந்தா அப்செட் ஆக வேண்டும் என நாக சைதன்யா விரும்புவதாக சிலர் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டபோது, திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர். ஆனால் நாகசைதன்யா மவுனம் காத்தது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
