புகுஷிமா அணுமின் நிலைய விபத்து பகுதிகளில் மக்கள் வசிக்க அனுமதி: 12 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை
டோக்கியோ: புகுஷிமா அணுமின் நிலைய விபத்து நடந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் ஒரு சில பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.மேலும் புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலையில் உள்ள ஜெனரேட்டர்கள் சேதம் அடைந்தன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் அணு கதிர்வீச்சு தாக்கியது. மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு அணு உலையில் இருந்து கதிர் வீச்சின் தாக்கம் அதிகமாக இருந்தது. 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்து 12 ஆண்டுகளுக்கு பின்,டோமியோகா நகரின் ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மக்கள் மீண்டும் குடியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில் பிரதமர் புமியோ கிஷிடா கலந்துகொண்டு பேசும்போது,‘‘ குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளது சாதாரண விஷயம் இல்லை. அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை விலக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அணு உலை விபத்தின் போது வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரில் இதுவரை 30 ஆயிரம் பேர் மீண்டும் அங்கு குடியேறியுள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
