போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
வாஷிங்டன்: உலக வங்கித் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸ், வரும் ஜூன் மாதம் 30ம் தேதி பதவி விலக உள்ளார். இதனால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. பங்காவை எதிர்த்து வேறு எந்த நாடும் தங்கள் பிரதிநிதிகளை நிறுத்தவில்லை. எனவே, அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். இவர் 5 ஆண்டு காலத்துக்கு உலக வங்கியின் தலைவராக பதவி வகிக்க முடியும்.பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை பூர்வீகமாகக் கொண்ட அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் என்னும் பங்கு நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். அஜய் பங்காவின் தேர்வு, உலக வங்கியின் இயக்குனர் குழுவால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
