அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெளியுறவு துறையின் மேலாண்மை மற்றும் வளத்துறையின் துணை அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மாவை அதிபர் ஜோ பைடன் கடந்தாண்டு டிசம்பரில் நியமித்தார். இந்நிலையில், செனட் சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் 67 வாக்குகளை பெற்று ரிச்சர்டு தேர்வானார். இதன் மூலம், அமெரிக்க வெளியுறவுத் துறையின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் இந்திய வம்சாவளி என்ற பெருமையை ரிச்சர்ட் வர்மா பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் சர்வதேச பொது கொள்கைக்கான தலைமை சட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முன்னதாக, கடந்த 2015-17ம் ஆண்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றினார்.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
