மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
ரோம்: சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என வாடிகன் தெரிவித்துள்ளது. போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு (86) மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த புதன்கிழமை ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புருனி கூறுகையில்,‘‘ போப்பாண்டவருக்கு சுவாசகுழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் பீட்ஸா சாப்பிட்டார்’’ என்றார். இதற்கிடையே, வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப்பாண்டவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது.* நலம் பெற மோடி வாழ்த்து பிரதமர் மோடி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், போப் விரைவாக குணமடையவும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறவும் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
