பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
கராச்சி: பாகிஸ்தானில் பெண் மருத்துவருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் இரு மருத்துவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் இயக்குநராக இருந்த பீர்பால் ஜெனானி என்ற பாகிஸ்தான் இந்து சமூகத்தை சேர்ந்த பிரபல கண் மருத்துவர், நேற்று பெண் மருத்துவர் குராத்துல் ஐன் என்பவருடன் காரில் சென்றார். அவர்களது கார் லியாரி விரைவுச்சாலை அருகே சென்ற போது, கும்பல் ஒன்று வழிமறித்தது. அந்த கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பீர்பால் ஜெனானி, குராத்துல் ஐன் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. படுகாயமடைந்த பீர்பால் ஜெனானி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குராத்துல் ஐன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் குறித்த செய்தியை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் யுஸ்ரா அஸ்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘டாக்டர் பீர்பால் ஜெனானி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் குராத்துல் ஐனின் தோளில் குண்டு பாய்ந்ததால், அவர் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் இந்து மருத்துவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக, பாகிஸ்தானின் ஐதராபாத்தை சேர்ந்த இந்து மருத்துவர் ஒருவர், அவரது வீட்டிற்குள் அவரது ஓட்டுனரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
