ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது குற்றச் சாட்டுகளை பதிவு செய்ய மன்ஹாட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 1.30,000 டாலர்கள் செலுத்தியதை மூடி மறைத்த குற்றத் திற்காக மன்ஹாட்டன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் நீதிபதிகள் அமர்வின் முன் ஆஜராகி ட்ரம்ப் சார்பில் அந்த பணத்தை வழங்கியதாக சாட்சியம் அளித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் கைது செய்யப்படுவார் என கருதப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களை போராட்டம் நடத்த அவர் தூண்டிவிட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மறுத்து வரும் நிலையில், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர நீதிபதிகள் குழு அனுமதி அளித்துள்ளது. குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டால் உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இதனிடையே வெள்ளை மாளிகை முன்பு கூடிய ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் இது ஒரு நல்ல செய்தி என குறிப்பிட்டுள்ளனர். மெரிக்காவின் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
