இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக கலந்து கொள்ள போகும் தினேஷ் கார்த்திக்!
சென்னை: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடப்பாண்டில் நடைபெற உள்ள ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக கலந்து கொள்ள போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்-ன் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இவர் தற்போது மிகவும் ஆபத்தான மேட்ச் பினிஷராக உருவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தினேஷ் கார்த்திக்-ன் இந்த அதிரடி ஆட்டம் பெரும் துணையாக அமைந்தது.இவரின் அதிரடி ஆட்டம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக வாய்ப்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் தினேஷ் கார்த்திக் மீண்டும் அதிரடி காட்டுவார் என ஆர்சிபி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக கலந்து கொள்ள போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
