மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா
மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, உள்ளூர் நட்சத்திரம் ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார். காலிறுதியில் அனஸ்டேசியா போதபோவாவுடன் மோதிய ஜெஸ்ஸிகா 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய ஜெஸ்ஸிகா 6-3 என 2வது செட்டை கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீஸ் ஆட்டத்தை தக்கவைத்து புள்ளிகளைக் குவிக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.அதில் சிறப்பாக செயல்பட்ட ஜெஸ்ஸிகா 4-6, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 2 மணி, 36 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீராங்கனை மார்டினா டிரெவிசானை எதிர்கொண்ட எலனா ரைபாகினா (கஜகிஸ்தான்) அதிரடியாக விளையாடி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் ஜெஸ்ஸிகா - ரைபாகினா மோத உள்ளனர். அல்கரஸ் முன்னேற்றம்: மயாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் களமிறங்கிய நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டாமி பவுலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். ரஷ்யாவின் மெத்வதேவ், கரென் கச்சனோவ், இத்தாலி வீரர் யானிக் சின்னர், அமெரிக்க வீரர்கள் டெய்லர் பிரிட்ஸ், கிறிஸ்டோபர் யூபேங்க்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
