மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!!
1990-களில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோ என்றால், சந்தேகமே வேண்டாம் அது சக்திமானாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் தாக்கம் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்திருந்தது.
கேபிள்களில் புதுப்புது சேனல்கள், புதுப்புது நிகழ்ச்சிகள் என அணிவகுத்து வந்தாலும், வாரக்கடைசியில் சக்திமானை பார்ப்பதற்கு என இளசுகள் முதல் பெரியவர்கள் வரை காத்துக்கிடந்த காலம் அது. சக்திமான் கேரக்டரும், அதன் வெளிப்படையான இன்னொரு வெகுளித்தனமான கேரக்டரான பண்டிட் கங்காதர் என இருவேடங்களில் கலக்கிய முகேஷ் கண்ணாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகம்.
ஒவ்வொரு எபிசோடின் முடிவில் முகேஷ் கண்ணா கொடுக்கும் யோகா ரகசியங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும் போன்ற டிப்ஸ்களும் சீரியலின் சிறப்பு அம்சங்கள். பண்டிதர் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்காரனாத் சாஸ்தியாக வரும் முகேஷ் கண்ணா, பின் அநீதியைக் கண்டு பொங்கி எழும் சக்திமானாக உருப்பெற்று தீயவற்றை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளால் பெரும் வரவேற்பை பெற்றது அத் தொடர்.
இந்நிலையில் சக்திமான் சீரியல் மீண்டும் புதிய பொலிவுடன் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய பாகத்தில், சிறு வயது சக்திமான் பற்றியும் அவருக்கு சக்திகள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது பற்றியும் அதே சமயம் பழைய தொடர் எங்கே நிறுத்தப்பட்டதோ அங்கே இருந்து புது சீரியல் துவங்கப்படும் எனவும். இதற்காக டிடி சேனலில் மாலை 6 மணி முதல் 6.30 வரை ஒளிபரப்பு செய்ய பேசி வருவதாக இந்த சீரியலின் ஹீரோ முகேஷ் கண்ணா கூறியுள்ளார். இப்போது மீண்டும் சக்திமான் வருகிறார். இப்போதைய குழந்தைகள் மட்டுமின்றி, 90களில் குழந்தைகளாக இருந்த பெரும்பாலானவர்களுக்குத் தான் இதில் ஆதீத ஆர்வம் இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
