தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதியாட்டத்தில் நுழைந்தது நியுசிலாந்து

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதியாட்டத்தில் நுழைந்தது நியுசிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை நூலிழையில் வீழ்த்தி நியுசிலாந்து இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது.

ஒரு பந்து மட்டுமே எஞ்சிய நிலையில், நியுசிலாந்தின் எலியட் சிக்சர் அடித்து தென்னாப்பிரிக்காவின் கனவுகளை தவிடுபொடியாக்கினார்.

முதலில் மட்டை பிடித்த தென்னாப்பிரிக்கா 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் தடைபட 43 ஓவரில் 298 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கு டக்வொர்த் லூயிஸ் முறையில் நியுசிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கிராண்ட் எலியட் 84 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துவக்க ஆட்டக்காரர் மெக்கெல்லம் அதிரடியாக 59 ரன்களைக் குவித்திருந்தார்.

1992 முதல் உலகக் கோப்பைகளில் பலமுறை தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு வந்து தோற்று வெளியேற நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை