கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது: கனேடிய தமிழ் காங்கிரஸ்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது: கனேடிய தமிழ் காங்கிரஸ்

கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை கனேடிய அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

வருடாந்தம் தன்னார்வ அடிப்படையில்ழ 10 மில்லியன் டொலர்கள் நிதி உதவியாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த உதவியை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப் போவதில்லை எனவும், இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாமையே உதவு தொகை நிறுத்தப்பட்டமைக்கான காரணம் எனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட அடிப்படையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை தடுக்க கனேடிய அரசாங்கம் எடுத்து வரும் முனைப்புக்கள் பாராட்டுக்குரியவை என கனேடிய தமிழ் காங்கிரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் முன்மாதிரியை ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளும் பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் இலங்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சர்வதேச சமூகம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் கனேடிய தமிழ் காங்கிரஸூம் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை