மார்க்கம் மாநகர சபை தேர்தல்! சோதியின் ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம்
கனடாவின் மார்க்கம் மாநகர சபைக்கான தேர்தல் தினம் நெருங்க நெருங்க ஏழாம் வட்டாரத்தில் போட்டியிடும் திரு.சோதி செல்வாவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை பத்து மணிக்கே அவரது ஆதரவாளர்களான இளைஞர்கள், யுவதிகள், வயது வந்தோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகிய அனைவரும் மார்க்கம் நியூடெல்கி வீதியிலுள்ள அவரது தேர்தல் அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள்.
திரு.சோதி வழமையான தனது சிரித்த முகத்துடன் கைகொடுத்து அவர்களை வரவேற்றார். அவரது பாரியார் திருமதி செல்வியும் அங்கே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.
கனடா தேர்தலில் அதிக ஈடுபாடு கொண்ட கொன்சவேற்றிவ் கட்சியின் எம்.பி.பதவிக்கான வேட்பாளரும் திரு.சோதியின் உற்ற நண்பருமான திரு.கென் கிருபா, வீடு வீடாகச் சென்று பிரச்சாரப் பணிகளில் ஈடுபடு முன்னர் எவ்வாறு பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வது என்பது பற்றி தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அவர்களில் பலர் ஏற்கனவே பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களாக இருந்த போதிலும் எல்லோருக்கும் பொதுவாக அவர் விளக்கினார்.
சிற்றுண்டி, கோப்பி அருந்தி விட்டு அனைவரும் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கார்களில் தமது பிரச்சாரப் பணிக்காக சென்றனர்.
நமது செய்தியாளரும் இரு குழுவினருடன் கூடவே சென்று அவர்கள் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்த போது புகைப் படங்களும் எடுத்துக் கொண்டார்.
வீதி சந்திகளில் திரு.சோதி செல்வாவின் படத்துடன் கூடிய விளம்பர போஸ்டர்கள் நாட்டப்பட்டுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
