நடிகரும் எம்எல்ஏ-வுமான முகேஷின் 2வது மனைவியும் விவாகரத்து கேட்டார்.; இதான் காரணமா.?
மலையாள சினிமாவில் மிக பிரபலமானவர் நடிகர் முகேஷ். மலையாளத்தில் இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருக்கிறார்.
இவர் சினிமாவில் பல விருதுகளை வெனறிருக்கிறார்.
தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, பொன்னர் சங்கர், ஐந்தாம் படை, உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் முகேஷ். தற்போது இவருக்கு வயது 64.
முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1988-ல் திருமணம் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு 2011-ல் இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
முகேஷ்க்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சரிதா குற்றம் சாட்டினார்.
இதன்பின்னர் பரத நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகா என்பவரை 2013-ல் நடிகர் முகேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு தேவிகாவும் முகேஷை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தேவிகா கூறியுள்ளதாவது…
“முகேஷ் உடன் 8 ஆண்டுகள் வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது. எனவே தான் அவரை பிரிய முடிவு செய்தேன். அவர் நல்ல கணவர் இல்லை.
எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Devika confirms her divorce with Mukesh Could not understand him even after eight years




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
