BREAKING சொகுசு கார் விவகாரம் : விஜய் மீது மட்டும் காட்டம் ஏன்.? வழக்கு விசாரணை விவரம் இதோ
கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் நடிகர் விஜய்.
இந்த வழக்கானது கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனி நீதிபதி, நடிகர் விஜய் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
சினிமாவை போல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும். வரி என்பது நன்கொடையல்ல. என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.
அப்போது நடைபெற்றதாவது…
விஜய்க்கு ₨1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை
நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்.
நடிகர் விஜய்யை ஏதோ தேசவிரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது.
சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் எங்கள் மீதான விமர்சனத்தை நீக்குங்கள்.
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, மதிக்கிறோம். நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.
2012ல் பல பேர் சொகுசு கார் தொடர்பாக வழக்கு போடப்பட்ட போது விஜய் மீது மட்டும் காட்டம் ஏன்..??
சொகுசு கார் நுழைவு வரி வழக்கில்
விஜய் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும்.” என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிட்டார்.
இதனையடுத்து நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த ஒரு லட்சம் அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இத்துடன் தனி நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்குவது பற்றி 4 வாரங்களுக்குப் பிறகு விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
High Court Stays Single Bench Judgment Which Had Scathing Remarks & Imposed Rs 1 Lakh Cost




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
