500 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி காலமானார்

FILMI STREET  FILMI STREET
500 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி காலமானார்

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் உடன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் புன்னகை, கண்ணா நலமா, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி.

மேலும் ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் இவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது சிறந்த நடிப்புக்காக 7 முறைகள் கர்நாடக அரசு விருதுகளை பெற்றிருக்கிறார் இவர்.

இவரது மகனுடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார் ஜெயந்தி.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்துள்ளார் ஜெயந்தி.

பல மூத்த கலைஞர்கள் சினிமாவில் நடித்து வந்தாலும் இவர் முதுமை காலங்களில் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் ஜெயந்தி மரணமடைந்துள்ளார்.

திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Veteran Actress Jayanthi, (76-years) popularly known as ‘Abhinaya Sharade’, passed away due to age-related ailments at Bengaluru. She was known for her notable contribution to the Kannada movies and acted in over 500 movies in Kannada, Telugu, Tamil, Malayalam and Hindi.

Veteran actress Jayanthi passed away

மூலக்கதை