ஐஸ்வர்யா ராஜேஷ் போடும் ‘திட்டம் இரண்டு’ என்ன.? ஜூலை 30ல் விடை காணலாம்
“நாம் விடை காண முயலும் மர்மங்கள் பல உள்ளன” – ரே பிராட்பர்ன்.
காவல் ஆய்வாளர் ஆதிரா சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, மாநகரத்தில் தனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் குழந்தைப் பருவ நண்பனுக்கான அவரது தேடல், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய மர்ம புதிராக மாறுகிறது.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த், சுபாஷ் செல்வம், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்த ‘திட்டம் இரண்டு’ படம் *சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*
சென்னைக்கு பணி மாற்றம், பேருந்து பயணத்தில் சக பயணியின் மீது காதல் என ஆதிராவின் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது.
ஆனால், குழந்தைப் பருவ நண்பன் சூர்யா காணாமல் போனதாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது.
சூர்யாவின் கார் விபத்தை விசாரிக்கும் ஆதிரா, இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக உணர்கிறார்.
இந்த வழக்கை ஆதிரா எப்படி கையாள்கிறார், இதில் அவர் வெற்றிபெற்றாரா என்பதே மீதி கதை.
*விக்னேஷ் கார்த்திக், இயக்குநர்:*
சமூகத்தில் உள்ள சில நிகழ்வுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்த படம் காட்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். சோனி லிவ்வில் திட்டம் இரண்டு வெளியவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
*ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகி, திட்டம் இரண்டு:*
‘திட்டம் இரண்டு’ படத்தில் எனது கதாபாத்திரம் பல அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கதையின் சாராம்சம் என்னை வெகுவாக கவர்ந்தது.
நண்பனின் மறைவில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்வார் என்பதை இந்தப் படம் கூறும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
படத்தில் உள்ள திருப்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும். சோனி லிவ் ஓடிடியில் இதுவே எனது முதல் படம். திட்டம் இரண்டின் வெளியீட்டுக்காக நான் ஆவலாக உள்ளேன்.
ஆஷிஷ் கோல்வால்கர், தலைவர், உள்ளடக்கம், சோனி என்டெர்டெயின்மென்ட் டெல்விஷன் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம்:*
திட்டம் இரண்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களை சோனி லிவ் மேலும் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த படத்தில் உள்ள விறுவிறுப்பு, மர்மம் மற்றும் திருப்பங்கள் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடும். திட்டம் இரண்டு சோனி லிவ்வில் வெளியாவதில் பெருமை கொள்கிறோம்.
Aishwarya Rajesh in Thittam Irandu will release on July 30




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
