அப்பா ஜெயராமைப் போல கமல்ஹாசனுடன் இணைந்த காளிதாஸ்

FILMI STREET  FILMI STREET
அப்பா ஜெயராமைப் போல கமல்ஹாசனுடன் இணைந்த காளிதாஸ்

தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் மலையாள நடிகர் ஜெயராம்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே 1989ல் வெளியான ‘சாணக்யன்’ என்ற மலையாள படத்திலும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜெயராம் மகன் காளிதாசும் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் காளிதாஸ் நடிக்கிறாராம். கமலின் மகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை கமல்ஹாசனே தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் கமலுடன் நடிக்கின்றனர்.

இவர்களின் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் லோகேஷ்.

Kalidas Jayaram is part of Kamal’s next movie

மூலக்கதை