தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு செய்தவர்கள் மத்தியில் இலவச தடுப்பூசி முகாம் நடத்தி இலவசங்கள் வழங்கிய சிரிஷ்
‘மெட்ரோ’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சிரிஷ்.
இவர் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு பல உதவிகள் புரிந்து வருகிறார்.
தற்போது கொரோனா தொற்று காலத்தில் பல பிரபலங்கள் “தடுப்பூசி போட்டுக் கொண்டோம்” என போட்டோ போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இவரோ சென்னையில் இலவச தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது…
“பல்வேறு அமைப்புகளால் தடுப்பூசி முகாம்களை ஆரம்பித்து வைப்பதற்கு நான் அழைக்கப்பட்டேன்.
தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைக்கச் செல்வதற்குப் பதிலாக, மக்களை ஊக்குவிப்பதற்காக சொந்தமாக தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தேன்.
நாங்கள் தடுப்பூசிகளைப் பெற்று பத்திரிகையாளர்களுக்கும் இலவச முகாமையும் ஏற்பாடு செய்தோம்.
மேலும் பொதுமக்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாமுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் கொடுத்தோம்”
இவ்வாறு சிரிஷ் தெரிவித்தார்.
கடந்த வாரம், ஜூலை 24ல் FEFSI (தென்னிந்தியாவின் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு) தொழிலாளர்களுக்கும தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Sirish arranged free vaccine camp for public




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
