ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்
டோக்கியோ: பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டின் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்துள்ளார். டோக்கியோவில் நேற்று ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின.
இன்று காலை தொடங்கிய துப்பாக்கிச்சுடுதல், பேட்மின்டன், வில்வித்தை ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தோற்று ஏமாற்றத்தை அளித்தனர். வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய தீபா குமாரி ஜோடியும் தோற்றுப்போனது.
இந்நிலையில் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம்(26)) பங்கேற்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச்சில் 87கிலோ கிளீன் அன்டு ஜெர்க்கில் 115 கிலோ தூக்கினார்.
மொத்தம் 202கிலோ தூக்கி பட்டியலில் 2வது இடம் பிடித்தார். அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். சீனாவின் ஹு ஜீஹுயீ மொத்தமாக 219கிலோ தூக்கி தங்கம் வென்றார்.
இந்தோனேஷியாவின் அய்ஷ் விண்டி 194கிலோ தூக்கி வெண்கலத்தை கைப்பற்றினார்.
மீராபாய் மூலம் இந்தியா முதல் பதக்கத்தை வென்றதுடன் பதக்கப்பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு சைகோம் சமீபத்தில் தாஷ்கண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் 49கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். ஏற்கனவே 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார்.
ஆனால் அடுத்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 48கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.
கூடவே ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை மீராபாய் பெற்றுள்ளார்.
ஆனால் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையும் மீராபாயை தான் சேரும்.
மு. க. ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது ேபஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ஒலிம்பிக்கில் முதல் நாளில் இந்தியாவுக்கு ஜொலிக்கும் ஆரம்பம்.
தன் மனதை கவர்ந்த செயலாக்கத்தால் இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை பளு தூக்குவதில் கொண்டு வந்த மீரா பாய் சானு சைகோம்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
