குலுக்கல் முறையில் எச் 1 பி விசா வழங்க அமெரிக்கா திட்டம்

CANADA MIRROR  CANADA MIRROR
குலுக்கல் முறையில் எச் 1 பி விசா வழங்க அமெரிக்கா திட்டம்

எச்1 பி விசாவுக்கான விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையைப் பயன்படுத்தி விசா வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிரந்தர குடியுரிமை இன்றி பணி நிமித்தமாகச் செல்வோருக்கு அமெரிக்கா எச்1 பி விசா வழங்குகின்றது. வரும் அக்டோபர் 1ம் திகதி தொடங்கவுள்ள 2014 ஆம் நிதி ஆண்டில் அதிக பட்சமாக 65 ஆயிரம் எச்1 பி விசாக்களை அமெரிக்க குடியுரிமை துறை வழங்குமெனத்தெரிகின்றது.

மேற்படி விசாவுக்காக சுமார் 1.95 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. இந்த அதிக பட்ச அளவானது ஏப்பிரல் முதல் தேதியிலிருந்து 5ஆம் தேதிக்குள்ளாகவே எட்டப்படுமெனவும் இதையடுத்து குலுக்கல் முறையைப் பின்பற்ற அமெரிக்க குடியுரிமைத் துறை முடிவுசெய்துள்ளது.

இவ்விசாக்கள் தகுதியுடையவர்களுக்கு கணனிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறையில் வழங்கப்படவுள்ளது.  இதற்கான விண்ணப்பங்கள் ஏப்பிரல் முதல் தேதியிலிருந்து பெறப்படவுள்ளன.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பவர்களில் 20 ஆயிரம் பேருக்கு எச் 1 பி விசாக்கள் வழங்கவும் முடிவு செய்யபட்டுள்ளது.

1,148 total views, 19 views today

மூலக்கதை