அமெரிக்காவில் பாடசாலை பஸ் மோதலால் ஒருவர் மரணம்

CANADA MIRROR  CANADA MIRROR
அமெரிக்காவில் பாடசாலை பஸ் மோதலால் ஒருவர் மரணம்

அமெரிக்காவில் இலிநொய்ஸ் எனுமிடத்தில் வெள்ளிக் கிழமை காலை  பாடசாலை பஸ்வண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களை ஏற்றிக்கொண்டு நீயுபோட் ஆரம்பப் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது பஸ்வண்டி ஜீப்புடன் மோதி சுழன்று பின் வேறொரு வாகனத்துடனும் மோதியிருக்கின்றது.

இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார் எனவும் பல மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள் எனவும் தெரியவருகின்றது.

இந்த வண்டியில்  35 மாணவர்கள் பயணம் செய்தார்கள் எனவும் அவர்கள் தப்பிவிட்டார்கள் எனவும் ஜீப் ஓட்டுனருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டமையால் அவர் மரணமடைந்துவிட்டார் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் பஸ் சாரதி சிவப்பு லைட்டின்போது பஸ் ஓட்டியிருக்கலாம் எனக் கூறப்பட்டபோதிலும் பின்பு இதுவரையில் யார்மீது தவறு என்பது திட்டவட்டமாக அறியப்படவில்லையென்பதால் வெள்ளி மாலைவரையில் எவர்மேலும் குற்றம் சாட்டப்படவில்லையெனத் தெரிகிறது.

இச் சம்பவத்தை நேரில் கண்ட பலர் சாட்சியமளிக்கின்றனர். விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சாட்சியங்களின்படி பஸ்வண்டி முதன் முதலில் ஜீப்புடன் மோதி பின்பும் இன்னெருவகை ஜீப்புடன் மோதியிருக்கின்றதெனவும் அப்போது பஸ்சின் மேல்பகுதி தட்டையாகிவிட்டதெனவும், வாகனத்தில் இருந்து சிதறிய பாகங்கள் அருகிலுள்ள பண்ணை நிலத்திற்குள் சிதறி விழுந்தன எனத் தெரிகின்றது.

அத்துடன் இறந்தவர் 62 வயதுடைய பிலிப் சிமித் எனப் பொலிசார் அடையாளம் கண்டுகொண்டனர். சிறுவர்களில் 25 பேர் வெள்ளி மாலையிலேயே மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஒருவருக்கு தலையில் காயம் எனவும், ஏனைய சிறுவர்களுக்கு சிறுசிறு காயங்களே ஏற்பட்டன எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்தச் சிறுவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

570 total views, 20 views today

மூலக்கதை