மெச்சிக்கோ வடிப்பகத்தில் விபத்து – ஏழு நபர்கள் பலி

CANADA MIRROR  CANADA MIRROR
மெச்சிக்கோ வடிப்பகத்தில் விபத்து – ஏழு நபர்கள் பலி

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மெச்சிக்கோ நகரில் உள்ள ஒரு வடிப்பகத்தில் விபத்து நடந்திருக்கின்றது. இந்த விபத்தில் ஏழு நபற்கள் மரணமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வடிப்பகம் மொடிலோ என அழைக்கப்படும பீர் உற்பத்தி செய்கின்ற ஒரு கொம்பனியாகும்.

அந்தக் கம்பனியில் கருத்துவழங்கத் தகுந்த அதிகாரி கூறுகையில் அந்த விபத்து ஒரு கொள்கலனில் நடந்ததெனவும், அந்தக் கொள்கலன் விபத்து நடந்தபோது பராமரிப்பு மற்றும் துப்புரவு வேலைகள் நடந்து கொண்டிருந்தன எனத் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலதிக விபரம் ஏதும் தெரிவிக்கவில்லையெனத் தெரிகின்றது.

மொடிலோ கம்பனியானது மிகவும் வருத்தம் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தரமாக ஆதரவு வழங்குவதற்கு விரும்புவதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் இக் கம்பனியானது இந்த விபத்துப் பற்றிய விசாரணை ஆரம்பித்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பேச்சாளர் இந்த விபத்தினால் உற்பத்தி பாதிப்படையுமா என்பது பற்றி ஏதுவும் குறிப்பிடவில்லை.

இந்தக் கம்பனியின் இணையத்தளத்தின்படி 1925ம் ஆண்டு இந்தக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டதெனத் தெரியவருகிறது. அத்துடன் இந்தக் கம்பனி உற்பத்தி செய்யக்கூடிய பீரின் அளவு 11.1 மில்லியன் கெக்ரோலிற்றர் அளவானவை எனத் தெரியவருகிறது.

553 total views, 21 views today

மூலக்கதை