பொஸ்ரன் மரதனில் குண்டு வெடிப்பு 2 பேர் பலி பலர் காயம்

CANADA MIRROR  CANADA MIRROR
பொஸ்ரன் மரதனில் குண்டு வெடிப்பு 2 பேர் பலி பலர் காயம்

பொஸ்ரன் மரதன் ஓட்ட மைதானத்தில் போட்டியாளர்கள் இறுதிக் கோட்டை அண்மித்த வேளையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன் 50ற்கும்மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. உலகத்திலேயே பழமைமிக்கதும் மதிப்புக்குரியதுமான மரதன் ஓட்டம் நடந்துகொண்டிருந்த மைதானம் உடைந்த கண்ணாடித்துண்டுகளும் புகைமண்டலமுமாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் 2 வெடிக்கக்கூடிய குண்டுகள் இறுதிக் கோட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாவும் அறியப்படுகின்றது.

இச்சம்பவத்திற்கான நோக்கமோ இதற்கு யார் காரணம் என்பன பற்றிய தகவல்கள் தெரியப்படவில்லை. இந்த ஓட்டத்தில் 27 ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

3வது குண்டு ஜோன் எவ் கெனடி லைபிரரியில் வெடித்துள்ளதாயும் தெரியவந்துள்ளது. மூன்று சம்பவங்களும் ஒன்றையொன்று தொடர்புடையதாக இருக்கலாமெனவும் கருதப்படுகின்றது.

சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவிக்கப்பட்டதாயும் அவர் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாரெனவும் அறியப்படுகின்றது

முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

2,898 total views, 18 views today

மூலக்கதை