அமெரிக்காவில் திரும்பவும் கோர விபத்து: ரெக்செஸ்சில் 15பேர் மரணம், 160பேர் காயம்

CANADA MIRROR  CANADA MIRROR
அமெரிக்காவில் திரும்பவும் கோர விபத்து: ரெக்செஸ்சில் 15பேர் மரணம், 160பேர் காயம்

திரும்பவும் ஒரு வெடி விபத்து அமெரிக்காவில் நடந்திருக்கின்றது. புதன்கிழமை உரம்  உற்பத்திசெய்கின்ற ஒரு உபகரணமூடாக இந்த வெடிவிபத்து நடந்திருக்கின்றது. இதன்மூலம் கிட்டத்தட்ட 15 நபர்கள் மரணம் அடைந்திருப்பதாகவும், 160ற்கு மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

இது நடைபெற்ற இடம் ரெக்செஸ். அத்துடன் வெடிவிபத்து நடந்த உபகரணத்தில் இருந்து நச்சுவாய்வு கக்கத்தொடங்கியதால் அப்பகுதிலுள்ள பெரும்பகுதி மக்கள் வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் எனத் தெரிகிறது.

வெடிப்பு நடைபெற்றபோது சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் “ நான் இவ்வாறான சம்பவத்தை நேரில் பார்த்ததில்லை, பார்ப்பதற்கு அது ஒரு போர் நடக்கின்ற இடம்போலக் காட்சியளித்தது “ எனத் தெரிவித்திருக்கின்றார்.

இச் சம்பவம் புதன்கிழமை மாலை நடந்திருக்கின்றது. கிட்டத்தட்ட மாலை 8 மணியளவில் நடந்திருக்கின்றது என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து தீ பரவியிருக்கின்றது. ஆனால் இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் இந்த விபத்திற்கான காரணம் குற்றச் செயல்களின் பிரதிபலிப்பா அல்லது வேதியல் பொருட்களின் எதிர் விளைவா என்பதைக் கண்டறிவதற்கான புலன்விசாரணைகள், பரிசோதனைகள் என்பன ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

இந்த தீப்பரம்பலைக் கட்டுபடுத்துவதற்காக முதலில்  சென்ற தீயணைப்பு வீரர்களில் ஆறு பேரைக் காணவில்லையென மேயர் ரொம்மி முஸ்க்கா செய்தித் தாபனமொன்றிற்குத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த தீயணைப்பு வீரர்கள் வெடிவிபத்து ஏற்படுவதற்கு 50 நிமிடத்திற்கு முன்பாக அப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்காகவும் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் போராடிக் கொண்டிருந்திருக்கின்றார்கள் என அறிவிக்கப்படுகிறது.

அதிகாரிகளின் கருத்துப்படி வெடிவிபத்து ஏற்பட்ட உபகரணத்தின் மூலமாக மேலதிகமான வெடிப்புகள் ஏற்படுதவற்கும், அதிகமான நச்சு வாயுக்கள் நகரத்துக்குள் பாய்ச்சப்படலாம் என்ற பயம் இருந்ததாகவும் பின்பு வேதியல் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் யாவும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள எனவும் தெரிவித்திருக்கின்றார்கள்.

பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைப்படி அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 8௰ தொகுதிகளில் வாழ்ந்த மக்கள் கிட்டத்தட்ட அந்த நகரின் அரைவாசித் தொகையினர் இடம் பெயர்ந்திருக்கின்றார்கள் எனவும் இனிச் சில சமயம் அந்தச் சம்பவம் நடந்த இடத்திற்கு அடுத்த் பக்கத்திலுள்ள குடியிருப்பினரும் வெளியேற்றப்படலாமெனக் கூறியிருக்கின்றார்.

அந்தப்பகுதி மேயர் அவர்கள் தொடர்ந்து கருத்துக் கூறுகையில் அதிகமான மக்கள் பாதிப்படைந்திருக்கின்றார்கள் எனவும், பலர் பயத்தின் பிடியில் சிக்குண்டார்கள் எனவும், தற்போதைய தமது கடமை இருக்கின்ற மக்களைப் பாதுகாப்பதுதான் முக்கியமானதாகத் தெரிகின்றது எனவும் எல்லாருடைய பிரார்த்தனையும் தேவைப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.

வேறொரு அதிகாரி கூறுகையில் கிட்டத்தட்ட 4 தொகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன எனவும் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளிவருகின்றன. வீடுகள் நாசமாக்கப்பட்டிருக்கின்றன, இடிந்து வீழ்ந்திருக்கின்றன, கூரைகள் தொங்குகின்றன, இந்தப்பகுதிக்குள் பாடசாலை இருக்கின்றது. ஒரு மருத்துவ நிலையமும் இருக்கின்றது. மருத்துவ நிலையத்தில் இருந்து முதலில் உதவிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள்133 நோயாளர்களை வெளியேற்றியுள்ளனர்கள் எனவும் இவர்களில் சிலர் சக்கர நாற்காலிபாவிப்பவர்கள் எனவும் தகவல்கள் வருகின்றன.

சில தகவல்களின்படி இந்த விபத்து புதன் மாலை கிட்டத்தட்ட 6:30ற்கு நடந்திருக்கின்றதெனவும், பரவிய தீ இரவு 11மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிகின்றது.

2,967 total views, 20 views today

மூலக்கதை