பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்திலுள்ள நைட் வீதி நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் மரணம், 3 பேர் காயம்.

CANADA MIRROR  CANADA MIRROR
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்திலுள்ள நைட் வீதி நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் மரணம், 3 பேர் காயம்.

புதன்கிழமை கிட்டத்தட்ட மாலை 3:30 அளவில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்துதொன்று ஏற்பட்டிருக்கிறது. இச் சம்பவம் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்திலுள்ள நைட் வீதியும் நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் நடந்துள்ளதெனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு நபர் மரணத்தைத் தழுவியதாகவும் மூன்று நபர்கள் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் விபத்தைச் சந்தித்த 5 வாகனங்களில் மூன்று வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியிருக்கின்றன என றிச்மண்ட் பகுதிப் பொலிசார் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டவர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் ஆபாத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும் தெரியவருகிறது.

பொலிசாரின் தகவலின்படி இந்த விபத்திற்கான காரணம் அதிகரித்த வேகத்தில் வாகனத்தைச் செலுத்தியமையே எனக் கருதப்படுகின்றது. விபத்தினைத் தொடர்ந்து நெடுஞ்சாலையின் இரு பக்க போக்குவரத்துப்பாதைகளும், நைட் வீதியின் தென் பகுதிக்கான போக்குவரத்துப்பாதையும் மூடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,940 total views, 14 views today

மூலக்கதை