நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை

ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற அமைச்சரின் பேச்சுக்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன், இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா, கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

இவரது இந்த பேச்சின் காணொளியை ஐ.நா அதிகாரிகள், நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவர் நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன் இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று கொச்சைப்படுத்தியுள்ளார்.

இதனைக் கண்டித்து மதிமுக தலைவர் வைகோ அவர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசு சார்பில் அமைச்சர் விமல் வீரசேன, நவநீதம்பிள்ளையிடம் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கோரியுள்ளனர்.

இது வைகோவின் அறிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று மதிமுக தெரிவித்துள்ளது.

மூலக்கதை