பிரபாகரனின் பிடிவாதத்தால் தனி ஈழம் அமையவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பிரபாகரனின் பிடிவாதத்தால் தனி ஈழம் அமையவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

பிரபாகரன் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் தனி ஈழம் அமைந்திருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார்.

ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஈவிகேஎஸ், இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது.

நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது.

தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ. 48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது.

மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தருவதுதான் அரசின் தலையாய கடமை. இதற்காகதான் மத்திய காங்கிரஸ் அரசு 87 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது.

ஆனால் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததால்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாக எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஊழலை பற்றி யார் பேசினாலும் அதற்கு தகுதி வேண்டும்.

மேலும் இப்போதைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விரைவில் சாசெய்யப்படும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் திமுக தலைவர் கூட்டணி பற்றி பேசுவார்.

காங்கிரஸ் தயவை நாடுவார். வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி இல்லை என்பார். கூட்டணியில் இருந்தபோதிலும் காங்கிரசை கருணாநிதி விமர்சித்துள்ளார் காரணம் காங்கிரசில் தட்டிக்கேட்க ஆளில்லை என்று தெரிவித்துள்ளார் .

மூலக்கதை