கொமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பார்: சிலோன் டுடே

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
கொமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பார்: சிலோன் டுடே

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளியாகும் "சிலோன் டுடே' பத்திரிகை, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில்,

"இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

நிகழ்ச்சி முடிந்ததும், இலங்கை உள்பட எந்த நாட்டுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடாமல் உடனடியாக அவர் புதுதில்லி திரும்புவார்.

பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அரசு அதிகாரி ஒருவர் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ஜானதிபதி ராஜபட்சவுக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் இதே தகவலைத் தெரிவித்ததாக இலங்கை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த விவகாரம் குறித்து புதுதில்லியிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறியுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம், இந்த வாரத்துக்குள் தகவல் வருமென்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

மூலக்கதை