தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க முடியாது: இலங்கை

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க முடியாது: இலங்கை

இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக கொழும்புவிலிருந்து இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே நேற்று டெல்லி புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை - தமிழக மீனர்வர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வரும் 20-ம் திகதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

அதற்கு முன்னர் தமிழக மீனவர்களை விடுவிக்க இயலாது. இரு நாட்டு மீனவர்களும் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அவர்களை ஒரே சமயத்தில் விடுவிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.

இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததால்தான் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள்" என்றார் ரஜிதா சேனரத்னே.

முன்னதாக, தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை