ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது ஏன்?

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது ஏன்?

இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கவே ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்தியா கலந்து கொள்ளவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து இத்துறையின் செயலர் சுஜாதா சிங், தமிழ் நாளேடுகளின் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர் நலன் மற்றும் முன்னேற்றம் காப்பதில் இந்திய அரசு எப்போதும் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வரு கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009ல் முடிவுக்கு வந்தது, ஒருங்கிணைந்த இலங்கை யில் அனைவரின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் வாய்ப் பினை அளித்துள்ளது.

இலங்கைத் தமிழர் உட்பட அனைத்து சமூகத்தவர்களின் நலம் மற்றும் உரிமைகளை காப்பதே, இந்திய அரசின் நோக்கமாகும். இதுவரை இலங்கை தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள் அனைத்தும், இதன் அடிப்படையில் ஆனதே. ஜெனீவாவில் வியாழக்கிழமை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததும் இந்த நோக்கத்தை வலுப்படுத்து வதாக அமையும் என்று நம்புகிறோம்.

இலங்கையில் உள்ள தமிழர் கள் நியாயம் பெறவும் முன் னேற்றம் காணவும் பன்னாட்டு சமூகம், இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஜெனீவாவில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாடு என்பது இதற்கான சுயவிளக்கமாக அமைகிறது. இலங்கையில் இதுவரை நடந்துள்ள முன்னேற்றப் பணிகளை நாம் அங்கீகரிக்கிறோம்.

இத்துடன், அதிதீவிர பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை குறைப்பது, காணா மல் போனவர்கள் விவகாரம், ராணுவம் கையகப்படுத்திய நிலங்களை படிப்படியாக உரிமை யாளர்களிடம் திருப்பி அளிப்பது, குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை குறைப்பது உட்பட தமிழர்களின் பல்வகை நலன்களில் இந்தியா மிகுந்த கவனம் கொண்டுள்ளது.

இதைச் செயல்படுத்த, ஐ.நா. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது உதவியாக இருக்கும் என எண்ணுகிறோம். இது இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும். இதனுடன், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களுக்கும் பயன் தருவதாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார் சுஜாதா சிங்.

மூலக்கதை