அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி

பெங்களூரு: பெங்களூருவில் மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் பவர்ஸ்டார் புனித்ராஜ்குமார் உடலுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 7. 20 மணிக்கு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் புனித்ராஜ்குமார். நேற்று முன்தினம் காலை உடல் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரது குடும்ப டாக்டர் ரமணாவைவிடம் ெ்சன்றார்.

அவருக்கு இசிஜி உள்ளிட்ட பரிசோதனை செய்தபோது லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

டாக்டர் ஆலோசனை பேரில் காலை 11. 30 மணிக்கு விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் தீவிர மாரடைப்பு காரணமாக உயிரி பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பகல் 3 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள புனித்ராஜ்குமார் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட திரையுலகின் முன்னணி கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ெபங்களூரு கண்டீரவா உள் விளையாட்டு அரங்கிற்கு உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு லட்சகணக்கானோர்  நீண்ட வரிசையில் வந்து கண்ணீர் அஞ்சலி ெசலுத்தினர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  

ஆளுநர், முதல்வர்கள் மலரஞ்சலி:-
கண்டீரவா உள்விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ள புனித்ராஜ்குமார் உடலுக்கு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ்பொம்மை, ஒன்றிய அமைச்சர்கள் பிரகலத் ஜோஷி, ஷோபா கரந்தலஜே, ஏ. நாராயணசாமி, ராஜீவ்சந்திரசேகர், மாநில அமைச்சர்கள் எஸ். டி. சோமசேகர், சுனில்குமார்.

பி. சி. பாட்டீல், சி. சி. பாட்டீல், பிரபுசவுஹான், சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில மஜத தலைவர் எச். கே. குமாராசாமி, மாநில பாஜ தலைவர் நளின்குமார் கட்டீல், கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் மொ. பெரியசாமி, கே. தட்சணாமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் டி. சிவமலை உள்பட பலர் நேரில் மலரஞ்சலி செலுத்தினர்.

ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாதசுவாமி, துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சித்தலிங்கசுவாமி, காகிநேலே மடத்தின் மடாதிபதி, சித்ரதுர்கா முருக ராஜேந்திர மடத்தின் மடாதிபதி முருக ராஜேந்திர சரணர், மாநில சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரி, முன்னாள் முதல்வர்கள் எஸ். எம். கிருஷ்ணா, எச். டி. குமாரசாமி, டி. வி. சதானந்தகவுடா, ஜெகதீஷ்ஷெட்டர், மாநில காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவகுமார் உள்பட கன்னட சங்கங்கள், தலித் அமைப்பினர், இடதுசாரி கட்சி தலைவர்கள், தன்னார்வு தொண்டு அமைப்புகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், கர்நாடக திரைப்பட கலைஞர்கள் மற்றும் ொதழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தினர், நடிகர்கள் யஷ், கணேஷ், சுதீப், தர்ஷன், உபேந்திரா, இசையமைப்பாளர் அம்சலேகா, பாடலாசிரியர் கல்யாண், நடிகைகள் ரக்‌ஷிதா, ரம்யா, மாலாஸ்ரீ, தமிழ் திரைப்பட நடிகர்கள் பிரபுதேவா, அர்ஜுன் சர்ஜா, தெலுங்கு நடிகர்கள் நந்தமூரி பாலகிருஷ்ணா, வெங்டேஷ், மலையாள நடிகர் மோகல்லால் உள்பட தென்மாநில திரையுலகினர் நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் அடக்கம்
புனித்ராஜ்குமாரின் உடல் இன்று அதிகாலை 4. 10 மணிக்கு குடும்ப வழக்கத்தின் படி பூஜைகள் நடத்திய பின், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக மைசூரு வங்கி சர்க்கிள், சாளுக்கிய சர்க்கிள், சாங்கி சாலை, யு. ஆர். ராவ் சந்திப்பு, யஷ்வந்தபுரம், கொரகுண்டேபாளையா வழியாக கண்டீரவா ஸ்டுடியோவுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு காலை 6. 30 மணி முதல் 7. 10 மணி வரை ஈடிகா வகுப்பினரின் வழக்கப்படி பூஜைகள் நடத்தப்பட்டது.

அதை ெதாடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் உடல் வைத்து உறவினர்கள் தோளில் தூக்கி கொண்டு சென்றனர்.

காலை 7. 20 மணிக்கு பெற்றோர் சமதி அருகில் புனித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராகவேந்திர ராஜ்குமாரின் மகன் வினய் ராஜ்குமார் இறுதி சடங்குகள் செய்தார்.

அவரது உடலை பார்த்து மனைவி அஷ்வினி, பிள்ளைகள் த்ருத்தி, வந்தனா, சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரராஜ்குமார், சகோதரி பூர்ணிமா உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் விடை கொடுத்தனர். இறுதி சடங்கில் முதல்வர் பசவராஜ்பொம்மை, அமைச்சர்கள் ஆர். அசோக், அஷ்வத் நாராயண், அரக ஞானேந்திரா, கோபாலையா, முனிரத்தினம், சுதாகர், சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி. ேக. சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கன்னட திரைப்பட நடிகர்கள் ரவிசந்திரன், சுதீப், தர்ஷன், உபேந்திரா, ஜக்கேஷ், துனியா விஜய், கணேஷ், யஷ், குமார் பங்காரப்பா, மது பங்காரப்பா, சாது கோகிலா, நடிகைகள் ரக்‌ஷிதா, தாரா, ரஷ்மிஸ்ரீராம், ஸ்ருதி, உமாஸ்ரீ, சுதாராணி, ரக்‌ஷிதா முத்தண்ணா, திரைப்பட தயாரிப்பாளர்கள் சா. ரா. கோவிந்து, ராக்லைன் வெங்கடேஷ் உள்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் ெதாழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தினர், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்பட பலர் இறுதி அஞ்சலியில் பங்கேற்று கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
புனித்ராஜ்குமார் உடல் ஊர்வலமாக எடுத்துவரும் போது அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க 9,500 போலீசார், 3 ஆயிரம் போக்குவரத்து போலீசார், 60 பெட்டாலியன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், 35 பெட்டாலியன் சி. ஏ. ஆர்.

போலீசார் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.


.

மூலக்கதை