அடுத்தடுத்து தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை; கொரோனா பரவல் அச்சத்தால் ‘மிஷன் 100 நாட்கள்’- மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு புதிய அறிவுறுத்தல்
புதுடெல்லி: தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க ‘மிஷன் 100 நாட்கள்’ என்ற திட்டத்தை பின்பற்ற மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ெதாற்று நேற்றைய நிலவரப்படி 2,30,971 பேர் தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 34 மாவட்டங்களில் 10 சதவீதம் அளவிற்கு கொரோனா பாசிடிவ் பாதிப்புகள் உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வாராந்திர பாசிடிவ் விகிதம் 5 சதவீதம் அல்லது அதற்கும் கீழாக குறைந்தால் மட்டுமே கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் இருப்பதாக கருதமுடியும். தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டு வந்தாலும் கூட, கொரோனா பரவல் சில மாநிலங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளன.
இந்நிலையில், அடுத்த சில நாட்களில் விஜயதசமி, தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், கொரோனா பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்று அச்சப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.
அதேநேரம், அடுத்தடுத்த வாரங்களில் திருவிழாக்கள் வருவதால் பண்டிகை காலங்களில் முன்ெனச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட அடுத்த 100 நாட்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்.
அப்போதுதான் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும். அக்டோபரில் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு திருவிழாக்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.
அப்போது தொற்றுநோயின் தினசரி பாதிப்பு மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் உள்ளது. எனவே, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதால் தொற்று வேகமாக பரவுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, கூட்டு முயற்சியுடன் நோய் பரவுவதை தடுக்க வேண்டும்.
மேலும், தற்போதைய நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
