இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்
அபுதாபி: இன்றிரவு அபுதாபியில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத்-டெல்லி அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி விளையாடிய இரு போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் உள்ளது.
ஆனால், இரு போட்டிகளிலும் தோல்வி கண்ட ஐதராபாத் அணி, வெற்றி முகத்திற்கு திரும்ப தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அவற்றில் ஐதராபாத் அணி 9 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
விளையாடிய இரு போட்டிகளில் கண்ட தோல்விகளால் துவண்டுள்ள ஐதராபாத் அணியில், கேப்டன் வார்னர், மணீஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்ட்டோவ் மட்டுமே நம்பிக்கை தூண்களாக உள்ளனர்.
பந்துவீச்சில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் நட்ராஜ் பக்கபலமாக உள்ளனர். டெல்லி அணியில் பேட்டிங்கில் தவன், ஷா, பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பார்மில் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் பார்மில் உள்ளனர்.
மூத்த ஸ்பின்னர் அஸ்வினும் அணிக்கு திரும்பினால் டெல்லி மேலும் வலுப்பெறும் என்கின்றனர்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
