இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்டெல்லி மோதல்

அபுதாபி: இன்றிரவு அபுதாபியில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத்-டெல்லி அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ‌சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி விளையாடிய இரு போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் உள்ளது.

ஆனால், இரு போட்டிகளிலும் தோல்வி கண்ட ஐதராபாத் அணி, வெற்றி முகத்திற்கு திரும்ப தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அவற்றில் ‌ஐதராபாத் அணி 9 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

விளையாடிய இரு போட்டிகளில் கண்ட தோல்விகளால் துவண்டுள்ள ஐதராபாத் அணியில், கேப்டன் வார்னர், மணீஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்ட்டோவ் மட்டுமே நம்பிக்கை தூண்களாக உள்ளனர்.

பந்துவீச்சில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் நட்ராஜ் பக்கபலமாக உள்ளனர். டெல்லி அணியில் பேட்டிங்கில் தவன், ஷா, பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பார்மில் உள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் பார்மில் உள்ளனர்.

மூத்த ஸ்பின்னர் அஸ்வினும் அணிக்கு திரும்பினால் டெல்லி மேலும் வலுப்பெறும் என்கின்றனர்.

.

மூலக்கதை