அழகிரியின் நிபந்தனைகள் ரொம்ப ஓவரா இருக்கு.. புலம்பும் ஆதரவாளர்கள்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
அழகிரியின் நிபந்தனைகள் ரொம்ப ஓவரா இருக்கு.. புலம்பும் ஆதரவாளர்கள்

அழகிரி ஏற்க முடியாத சில நிபந்தனைகளை விதிப்பதாலேயே அவரை தி.மு.க வில் மீண்டும் இணைக்க முடியவில்லை என கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை, மீண்டும் திமுக வில் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பெரும்பாடு படுகின்றனர்.

திருமண விழா ஒன்றில் கருணாநதியையும் அழகரியையும் சந்திக்க வைத்து பேச வைக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆனால் கருணாநதியை சற்றும் கண்டுக் கொள்ளாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டுள்ளார் அழகிரி.

மேலும் தான் கட்சியில் சேர வேண்டும் என்றால், தான் ஏற்கனவே வகித்த தென் மண்டல அமைப்பு செயலர் பதவி தர வேண்டும்.

தென் மாவட்டங்களில் உள்ள, 10 லோக்சபா தொகுதிகளும், தன் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தன் ஆதரவாளர்கள் அவ்வளவு பேரையும், மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கின்றார்.

இதனாலேயே அழகிரி மீண்டும் கட்சியில் இணைவது இழுத்துக் கொண்டே போகிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை