இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி
துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை டி. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி. 20 உலக கோப்பை நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டித்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்தி முடித்தது.
இந்நிலையில் 7வது டி. 20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டும், 8வது தொடர் 2022ம்ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு உலக கோப்பை டி. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
5 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் டி. 20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பணியில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான கவுன்டவுன் நேற்று துபாயில் நடந்தது.
இதில் கங்குலி, ஜெய்ஷா, ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னி பங்கேற்றனர்.
அப்போது பேசிய கங்குலி, இந்தியா போட்டியை நடத்துவது மிகவும் மரியாதைக்குரிய விஷயம், அங்கு விளையாடும் வாய்ப்பால் வீரர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஐ. சி. சி நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நான் ஒரு வீரராக இருப்பதை அனுபவித்துள்ளேன்.
கிரிக்கெட்டின் ஒவ்வொரு ஆட்டத்தையும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். மதிப்பு மிக்க இந்த தொடரை வெற்றிகரமாக நடத்த முயற்சிப்பேன் என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
