ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐதராபாத்பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 7. 30 மணிக்கு நடக்கும் 22வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் 5 போட்டியில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

வார்னர் நன்றாக தொடங்கினாலும் ரன் குவிக்கும் நேரத்தில் ஆட்டம் இழந்து விடுகிறார். பேர்ஸ்டோவ், வில்லியம்சன், மணிஷ்பாண்டேவும் நிலையான ஆட்டத்தை தொடரவில்லை.

மிடில் ஆர்டர் மோசமாக உள்ளதால் இன்று விஜய்சங்கர் ஆட வாய்ப்பு உள்ளது. புவனேஸ்வர்குமார் இல்லாத நிலையில் நடராஜன், கலீல் அகமது மீது பொறுப்பு அதிகரித்துள்ளது.

ரஷித்கான் மட்டும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

இன்று வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறலாம்.
மறுபுறம் பஞ்சாப் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

மயங்க் அகர்வால்- கே. எல். ராகுல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தாலும் மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல், சர்ப்ராஸ்கான், பூரன் சொதப்பல் தொடர்கிறது. பந்துவீச்சில் ஷமி, கட்ரெல் கலக்கினாலும் திறமையான சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது பெரும் குறை.

தொடர் தோல்வியால் கட்டாய வெற்றி நெருக்கடியில் பஞ்சாப் களம் இறங்குகிறது. இரு அணிகளும் 14 முறை மோதி உள்ளன.

இதில் ஐதராபாத் 10, பஞ்சாப் 4ல் வென்றுள்ளன.

கடைசியாக மோதிய 5 போட்டியில் 3ல் ஐதராபாத், 2ல் பஞ்சாப் வென்றுள்ளன.

.

மூலக்கதை