காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியின் ஃப்ரி ஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூகி இரி இறுதிப்போட்டியில் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த யூகியை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார் வினேஷ் போகத். இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
வெற்றிக்குப் பிறகு வினேஷ் போகத் பேசுகையில், தங்கம் வெல்வதை எனது இலக்காகக் கொண்டிருந்தேன். நான் ஆசிய அளவில் ஏற்கனவே வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளேன். அதனால் இன்று தங்கம் வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டேன். எனது உடலும் அதற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது. நான் நன்றாகப் பயிற்சி பெற்றிருந்தேன். கடவுளும் எனக்கு கருணை காட்டினார். காயங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடினமான ஒன்று. விளையாட்டு வீரர்கள் காயங்களுக்குப் பின்னர்தான் வலுவாகக் காணப்படுகிறார்கள் எனச் சிலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை உண்மை எனத் தற்போது நினைக்கிறேன் என உருக்கமாக கூறினார்".
வினேஷ் போகத் ரியோ ஒலிம்பிக்கில் காயத்தால் வெளியேறினாலும், தற்போது தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது, இந்திய விளையாட்டு வீராங்களைகள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
