பா-து-கலே - சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பாதுகலே  சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர்!

சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரான்ஸ் வழியாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
போலந்து நாட்டைச் சேர்ந்த பொதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரு நபர்கள் இந்த ஆட்கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். போலந்தில் இருந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி Eurotunnel வழியாக பிரான்சுக்குள் வாகனம் ஒன்று நுழைந்துள்ளது. அதனுள் முழுவதும் சவப்பெட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன.  அவை அனைத்தும் பிரித்தானியாவுக்குச் செல்ல கொண்டுவரப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், பா-து-கலேயின் Coquelles நகரில் வைத்து சோதனையிடப்பட்டிருந்தபோது, சவப்பெட்டி ஒன்றில் ஈராக்கைச் சேர்ந்த அகதி ஒருவர் உயிரை பணயம் வைத்து ஒளிந்திருந்தது பயணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கடத்தல் பணியினை மேற்கொண்டிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை