இளைஞர்களை கத்தியுடன் பின் தொடர்ந்த மர்ம பெண்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இளைஞர்களை கத்தியுடன் பின் தொடர்ந்த மர்ம பெண்!!

நான்கு இளைஞர்களை மர்ம பெண் ஒருவர், கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு பின் தொடர்ந்துள்ளார். 
 
செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 9 ஆம் திகதி இச்சம்பவம் Corbeil-Essonnes (Essonne) இல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Louise-Michel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை, பெண் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அவர் 40 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
உடனடியாக தலையிட்ட காவல்துறையினர் 14:00 மணியில் இருந்து 15:30 மணிக்குள்ளாக குறித்த பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை முன்னதாகவே காவல்துறையினர் அறிவார்கள் என்றபோதும், இச்சம்பவத்துக்குரிய காரணம் அறிய முடியவில்லை. குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை