லா கூர்னேயில் துப்பாக்கிச்சூடு! - ஆயுததாரிகள் தப்பியோட்டம்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
லா கூர்னேயில் துப்பாக்கிச்சூடு!  ஆயுததாரிகள் தப்பியோட்டம்..!!

நேற்று புதன்கிழமை லா கூர்னேயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
 
நேற்று ஏப்ரல் 10 ஆம் திகதி, மாலை 5.45 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு La Courneuve இல் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் தனது பின் புறத்தில் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை காவல்துறை அதிகாரி ஒருவர் எதேர்ச்சையாக கண்டுள்ளார். உடனடியாக காவல்துறை அதிகாரி, சக அதிகாரகளுக்கு தகவல் தெரிவித்ததோடு,  SAMU சேவையினையும் அழைத்திருந்தார். 
 
கிடைக்கபெற்ற தகவல்களின் படி, காயமடைந்த நபர் 35 வயதுடையவர் எனவும், சமூக சேவைகளில் அதிகம் தன்னை ஈடடுத்திக்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரோடு சேர்த்து மொத்தமாக மூவர் தேடப்பட்டு வருகின்றனர். பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மூலக்கதை