47 குழந்தைகளுக்கு தந்தையான கணவர்: வீட்டுக்கு தெரியாமல் நடந்த அதிர்ச்சி செயல்
பிரித்தானியாவில் தனக்கு தெரியாமல் 47 குழந்தைகளுக்கு கணவர் தந்தையாகியிருப்பதை அறிந்த மனைவி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.
அமெரிக்க இணையதளமான ரெடிக் தளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் மற்றும் கேள்விகளை பதிவிடுவார்கள். அதனை பார்க்கும் பொதுமக்கள் யோசனைகள், அறிவுரைகள் வழங்குவார்கள்.
அந்த வகையில் fedupwife1234 என்கிற பயனாளர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவருடைய 47 வயது கணவனுடன் 8 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு தற்போது 1 குழந்தை இருக்கிறது.
திருமணம் செய்துகொள்வதற்கு முன்னாள் நடந்த டேட்டிங்கின் போது, விந்தணுக்களை தானம் செய்திருப்பதாக அவருடைய கணவர் கூறியிருக்கிறார்.
2 அல்லது 4 குழந்தைகள் தான் பிறந்திருக்கலாம் என அவருடைய மனைவியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் விந்தணுக்கள் தானம் மூலம் இதுவரை எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என கணவரிடம் கேட்டுள்ளார். கடைசியாக கருத்தரிப்பு மையத்தில் கேட்டபடி, 47 குழந்தைகள் என கணவர் கூறியுள்ளார்.
இதனை கேட்டதும் அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். பிரித்தானிய சட்டப்படி குழந்தை 18 வயதை அடைந்ததும் குழந்தைகளின் உயிரியல் தந்தை யார் என்கிற விவரத்தினை தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை அவருடைய குழந்தைகள் எதிர்காலத்தில் தேடி வந்தால் நான் என்ன செய்வது என குழம்பி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து கேள்விக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிலளித்துள்ளனர். அதில் பெரும்பாலானோர், இந்த விவகாரத்திற்காக அதிகம் உணர்ச்சிப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
