கண்ணில் உயிருடன் இருந்த தேனீக்களை அகற்றி வைத்தியர்கள் சாதனை!
தாய்வான் பெண்ணின் கண்ணில் இருந்த 4 தேனீக்களை வைத்தியர்கள் நூதனமாக எடுத்து, அந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இன்றி காப்பாற்றியுள்ளனர்.
தாய்வானில் ஹீ என்ற 29 வயதான பெண் கடந்த வாரம் தனது உறவினரின் கல்லறைக்கு சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது கண்களில் அரிப்பு மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கைகளை கொண்டு வழக்கம்போல கண்களை கசக்கியுள்ளார். தொடர்ந்து வலி ஏற்படவே கண்களை கழுவியுள்ளார். சரிவரவில்லை. மறுநாள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரைஅணுகியுள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியர்கள் கூறுகையில்,
கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போல் இருந்தது. மைக்ரோஸ்கோப் மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன். அப்போது 4 தேனீக்கள் உள்ளே இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் மெதுவாக அவரது கருவிழிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை எடுத்தேன். அவை உயிருடன் இருந்தன. உலகிலேயே இது தான் முதல் நிகழ்வு என நினைக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 5 நாட்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 80% பார்வை சரிசெய்யப்பட்டுள்ளது. பார்வையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என டாக்டர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
