இவ்வருடத்தில் தொற்றுநோயினால் 9,500 பேர் பலி! - Santé Publique France தகவல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இவ்வருடத்தில் தொற்றுநோயினால் 9,500 பேர் பலி!  Santé Publique France தகவல்!!

தொற்றுநோய் காய்ச்சலினால் இவ்வருடத்தில் மாத்திரம் 9,500 பேர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று புதன்கிழமை ஏப்ரல் 10 ஆம் திகதி இத்தகவலை Santé Publique France வெளியிட்டுள்ளது. கடந்த வருட ஒக்டோபரில் இருந்து இவ்வருடம் மார்ச் 24 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட மொத்த தகவல் திரட்டில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இதுவரை,  9,500 பேர் தொற்றுநோய் காய்ச்சலினால் பலியாகியுள்ளனர். இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிக கணிசமான அதிகரிப்பாகும். உயிரிழந்தவர்களில் 87 வீதமானவர்கள் எழுபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
2018 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை இந்த தொற்றுநோய் காய்ச்சலினால் இடம்பெற்ற பலி எண்ணிக்கை 12,980 ஆக இருந்தது. அதேவேளை, 2016 தொடக்கம் 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14,400 ஆக இருந்தது.

மூலக்கதை