ஐரோப்பாவை கதிகலங்க செய்த சம்பவம் - இளம் துண்டுகளாக நறுக்கி படுகொலை

PARIS TAMIL  PARIS TAMIL
ஐரோப்பாவை கதிகலங்க செய்த சம்பவம்  இளம் துண்டுகளாக நறுக்கி படுகொலை

துருக்கியில் திருமணமான நபரின் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் ஒரு விடுமுறை வாடகை குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.
 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, அங்கிருந்த படுக்கையின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டிருந்த ஒரு உடலை கைப்பற்றினர்.
 
அவருடைய காதுகளும், விரல்களும் துண்டாக நறுக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சூட்கேஸுடன் அடிக்கடி அறைக்கு சென்றுவந்த ஜீவர் கோல் ஆர் (29) என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
 
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். இவர் கொலையுண்ட 25 வயதான நஜியா அரேப்சாயிடம் காதலை கூறியதாக தெரிகிறது.
 
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்திருக்கிறார் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
 

மூலக்கதை