லண்டனில் நடந்த பயங்கரம்! 20 வயது இளைஞன் பரிதாபமாக பலி

PARIS TAMIL  PARIS TAMIL
லண்டனில் நடந்த பயங்கரம்! 20 வயது இளைஞன் பரிதாபமாக பலி

கிழக்கு லண்டன் மனோர் பார்க் பகுதியில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

 
நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
ஆணொருவர் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவசர சிகிச்சை பிரிவினரின் கடும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் மூன்று ஆண்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர்.
 
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்களை முன்வருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூலக்கதை