டொலர், பவுண்ட், யூரோவுக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
டொலர், பவுண்ட், யூரோவுக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவு அதிகரிப்பு ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.

 
இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
 
இந்த வருடம் கடந்த 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போதும் இலங்கை ரூபாயின் பெறுமதி 4.5 வீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளளது.
 
மத்திய வங்கியின் புதிய அறிக்கைக்கமைய நேற்றை தினம் இலங்கை ரூபாவின் விற்பனை விலை 176.4647 ரூபாவாகவும் கொள்வனவு விலை 172.6206 ரூபாவாகவும் பதிவாகி இருந்தது.
 
2018ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி 16.4 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
 
எனினும் இந்த வருடம் இலங்கை ரூபாயியன் பெறுமதி பாரியளவில் வலுவடைந்துள்ளது.
 
அத்துடன் பிரித்தானிய பவுண்ட்டுடன் ஒப்பிடும் போது 1.6 வீதத்திலும், யூரோவுக்கு எதிரான 6.5 வீதத்திலும், ஜப்பான் யென்னுக்கு நிகராக 5.5 வீதத்திலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 3.4 வீதத்திலும் இலங்கை ரூபாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மூலக்கதை